Posts

Showing posts from November, 2022

Reading / Comprehension Exercises : Graded

English Vocabulary Reading Exercise   1. பாடத்தை கவனிக்காமல்  யார் அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அல்லது பேசிக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் கடைசி வரிசைக்கு போகலாம் .    2.  ஆனால்  எல்லா வகுப்புகளிலும் கடைசி வரிசையில்  உள்ள அவர்கள்தான்  பாட இறுதியில்  வரும்  கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்.    3. மாணவர்களால் எதையும் சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு முழு முதல் காரணம் அவர்களுக்கு பாஸ் செய்து அடுத்த மேல் வகுப்பிற்குப்  போக [தங்கள்  முன்னேற்றத்தில்]  அக்கறை இல்லை என்றும், கேட்பதிலும் கவனிப்பதிலும் அக்கறை இல்லை என்றும், காதும் கண்களும் கூர்மையாக வேலை செய்யவில்லை என்றும் பொருள்.  4.வகுப்புக்கு வரும் முன்பு மேற்கூறிய மூன்றையும் தயார் செய்து கொண்டு வாருங்கள் !!  உங்கள் பள்ளி/கல்லூரி வயதை தாண்டிய பிறகு,  இந்த 40 நிமிட வகுப்பு நீங்கள் வேலையில், தொழிலில் புகழ் பெறுவீர்களா / வசதியாக இருப்பீர்களா என மறைமுகமாக சோதனை செய்கிறது. அதை மறக்கக் கூடாது.  இப்போது மூச்சுப் பயிற்சி செய்யலாம்.. 

IEC Comprehension Giraffe ஒட்டகசிவிங்கி (for the week 7-16 Nov.22)

Image
~ Note: This evidyaloka lesson has been aligned with the relevant portion of the school curriculum as seen below  [Total Min:40x4]    Lesson Plan : Link   || அவசியம்: படிப்பதிலும் பதிலளிப்பதிலும் மாணவர்களின் பங்கேற்பு  ||     * எந்தவொரு பாடம் அல்லது கருத்தையும்  புரிந்து கொள்ள யார், என்ன, எங்கே, ஏன், எப்போது, ​​எப்படி, போன்ற சொற்களால் விரிவான கேள்விகளை மாணவர்கள்  கேட்க வேண்டும்.   * படிக்கும்போது (முக்கியமாக, ஆங்கிலம் போன்ற வேற்று மொழியில்) மாணவர்கள்  ஒவ்வொரு வாக்கியம் அல்லது பாரா / பத்தி முடியும் முன் மாணவர்கள் என்ன புரிந்தது என்பதை சரி பார்க்க, யார், எங்கு, என்ன, ஏன், எப்போது, எப்படி போன்ற கேள்விகளை கேட்டு கருத்தை சரியாக புரிந்து கொண்டார்களா என்பதை அவர்களே சரி பார்க்க வேண்டும்.   * இலக்கணத்தில், Preposition / முன்னிடை சொல் என்பது  மேலே உள்ள விரிவான விசாரணை  கேள்விகள் போன்ற ஒன்று தான் , இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு பெயர்ச்சொல் அல்லது அதன் வினைச்சொல்லின் செயல்பாடுகளைப் (இடம், நிலை, நேரம் ஆகியவை ) புரிந்துகொள்வதற்கான ஒரே நோக்கத்தை வழங்குகின்றன என்பதைக் குறிக்கும்.