கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
கல்விதான் நம் எல்லாரையும் எல்லா வகையிலும் வளர்வதற்கு வாய்ப்பைத் தருகிறது. அந்தக் கல்வியைப் பற்றித் திருவள்ளுவர் கூறுகிறார், கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தோழாஅர் எனின் என்றார். கல்வி கற்பதன் பயன் கடவுளைத் தொழுவது, அவரது திருவடிகளைத் தொழுவது. ஆகவே பக்தியோடு பிறந்து, பக்தியான விஷயங்களோடு தொடர்பு கொண்டு வாழ்வதே மனித வாழ்விலே முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இளம் வயது முதற்கொண்டே கல்வியைக் கற்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கல்வி என்பதிலே 'கல்' 'வி' என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. 'கல்' என்றால் கற்றுக்கொள் என்று அர்த்தம். 'வி' எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? வெற்றி தருவதை, கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பெறும் கல்வி மட்டும் இருந்தால் போதாது. அடுத்தடுத்த வகுப்புக்கு நாம் செல்வது போல், நம்முடைய வயது ஏறிக்கொண்டே போவதுபோல், பணிவும், பக்தியும் பண்புகளும் வளர்ந்து கொண்டே போகவேண்டும் - வகுப்பு ஏற ஏறப் பாடங்களும் ஏறிக்கொண்டே போகிறதல்லவா, பள்ளி மாணவர்கள் எல்லாம் படிக்கும்போது படிப்பிலே கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். எப்படி படிக்க வேண்டும் ?