Unit 1 - English :: The Twins - comprehending through questioning
மாணவர்களே ! இங்கு உள்ள முதல் ஐந்து பத்திகளை மூன்று நிமிடங்களுக்குள் படித்து விடுங்கள்:
1. திங்கள் அல்லது செவ்வாய் அன்று அந்த வகுப்பில் எனது முந்தைய வகுப்பில் " I WANT TO BE " என்ற பாடத்திற்கு கேள்வி பதில் பயிற்சி எப்படி செய்வது என பார்த்தோம் . அதை நீங்கள் இரண்டு நாளில் முடித்து உங்கள் இ-வகுப்பறை அலுவலரிடம் (CA) கொடுத்து விடுவீர்கள். இப்போது அதற்கு அடுத்த பாடம் பார்ப்போமா ?
2. நமது வாழ்க்கையில் பெயர் இல்லாமல் நாம் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாது, அவற்றை நினைவில் கொள்ளவும் முடியாது. ஒரே மாதிரி இருக்கும் கீழே உள்ளவர்களுக்கு தனித்தனி பெயர் இருந்தாலே யார் எது என கண்டு பிடிப்பது கடினம்தான் !
3. அந்த பெயர் எதுவாக இருந்தால் என்ன, மனிதர் பெயரோ, பொருள் பெயரோ, செடியின் பெயரோ, விலங்கின் பெயரோ, ஏதோ ஒன்று இருந்தாலும் அதற்கென்று ஒரு தனி பெயர் மற்றும் அதனுடய பிரதி பெயர் சொல் அல்லது நிழல் பெயர்சொல் இருக்க வேண்டும். இவை இரண்டும் சேர்ந்தது தான் ஆங்கிலத்தில் NOUN , PRONOUN.4. நீங்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் இல்லாவிட்டாலும், தமிழில் உங்களுக்கு தெரிந்த அனைத்து பெயர்சொல்களுக்கு சமமாக அவற்றின் ஆங்கில சொல்லும் தெரிந்திருக்க வேண்டும். அவைகளைப் பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.
5. சீதா & கீதா என இரண்டு மாணவிகள். அவர்களைப் பற்றி முதலில் பார்ப்போம். அப்போது உங்களுக்கு புரியும் : ஏன் எல்லோருக்கும் தனித்தனி பெயர் தேவை என்று.