Who moved my cheese ? Listening & Comprehension 20/3 and 24/3
எவ்வளவு கவனித்தீர்கள், எவ்வளவு புரிந்தது, எவ்வளவு நினைவு இருக்கிறது ?

Sniff (ஸ்நிஃப்) மற்றும் Scurry (ஸ்கர்ரி) : இரண்டும் சிறிய எலிகள்.
ஹெம் மற்றும் ஹா: எலி அளவில் குட்டி மனிதர்களான இரண்டு பேர்.
அவர்கள் நான்கு பேரும் "சீஸ்" - அதாவது வெண்ணையை- தேடுகிறார்கள். இப்போது, இந்தக் கதையில், "சீஸ்" என்பது தினமும் சாப்பிடும் வெறும் உணவு என்று நினைக்காதீர்கள். அது வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எந்த இலட்சியம் அல்லது தேவையை குறிக்கிறது, அதாவது உதாரணமாக :
மகிழ்ச்சி அல்லது உணவு அல்லது ஒரு நல்ல வேலை அல்லது நல்ல நட்பு அல்லது நல்ல அறிவு / படிப்பு.. .. என எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதை தேடி இந்த நான்கு பெரும் போவதாக வைத்துக் கொள்ளலாம்.
என்ன நடக்கிறது கதையில் என்பது இங்கே:
அவர்கள் அனைவரும் சுரங்கத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெரிய சீஸ் குவியலைக் காண்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! தினமும் சாப்பிட அந்த குவியல் இருந்த இடத்திற்கு சாப்பிட வருவார்கள்.
மோப்பம் மற்றும் ஸ்கர்ரி ஆகிய எலிகள், சீஸை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. இவர்கள் சாப்பிட சாப்பிட அந்த குவியல் சிறியதாக மாறத் தொடங்கும் போது அவை அதைக் கவனிக்கின்றன.
ஆனால், ஹெம் மற்றும் ஹா, (சிறிய மனிதர்கள்), சீஸ் எப்போதும் அங்கு அதே குவியலாக பெரிய அளவில் இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு நாள், தினமும் குறைந்து குறைந்து , சீஸ் முழுவதும் போய்விட்டது! இப்போது எலிகள் என்ன செய்கின்றன, குட்டி மனிதர்கள் என்ன செய்கிறார்கள் ?
இந்த SNIFF மற்றும் SCURRY எலிகள் புதிய சீஸைக் கண்டுபிடிக்க விரைவாக வேறு திசைகளில் ஓடுகின்றன. அவை புதிய உணவை கண்டுபிடிக்க விரைவாக தங்களை தயார் படுத்திக் கொள்கின்றன. ஆனால் ஹெம் மற்றும் ஹா (இரண்டு குட்டி மனிதர்) வருத்தப்பட்டு கோபப்படுகிறார்கள். குவியல் எப்படி காணாமல் போயிற்று என ஆராய்ச்சி செய்கிறார்கள் !!! அவர்கள் தங்கள் பழைய இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு, "தான் மாற வேண்டும்" என்பதை ஹாவ் உணர்ந்து, புதிய சீஸைத் தேடுவதற்காகப் சுரங்கத்தில் மேலும் உள்ளே செல்கிறார். நல்ல விஷயத்திற்காக நம்மை மாற்றிக் கொள்வது நல்லது என்பதை ஹாவ் கற்றுக்கொள்கிறார், மேலும் அவர் புதிய சீஸை (உணவு) கண்டுபிடிக்கிறார்.
ஹெம், தான் இருக்கும் இடத்திலேயே இருக்கிறார், சீஸ் தானாகவே அதே இடத்தில் மீண்டும் வரும் என கற்பனை செய்து கண்டு அது ஏன் காணாமல் போய் விட்டது என வருந்தி எதுவும் செய்யாமல் இருக்கிறார். வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார்.
கதை இத்துடன் முடிந்து விட்டது.
முக்கிய பாடம்:
விஷயங்கள் மாறுகின்றன, மாற்றம் நல்லதே !!
மாற்றங்கள் வரும்போது புதிய வாய்ப்புகளை / நமக்கு தேவையானதை தேடிச் செல்லத் தயாராக இருப்பது முக்கியம். மாற்றத்தைக் கண்டு பயப்படுவதால் , நாம் புதிய மற்றும் சிறந்த விஷயங்களைக் கண்டுபிடிப்பதை அது தடுக்கிறது.
எனவே, கதையைப் போலவே, உங்கள் வாழ்க்கையில் விஷயங்கள் மாறும்போது, பயப்பட வேண்டாம்! ஸ்னிஃப், ஸ்கர்ரி மற்றும் ஹாவைப் போல இருங்கள், ஹெம் போல அல்ல !!உங்கள் புதிய "சீஸை"த் தேடிச் செல்லுங்கள்!
இந்த கதை ஒரு ஒரு பெரிய சுரங்கத்தில் நடப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம். இதில் இரண்டு எலிகளும் , அவற்றைப் போலவே குட்டியாக இரண்டு குட்டி மனிதர்களும் இருக்கிறார்கள்.
Sniff (ஸ்நிஃப்) மற்றும் Scurry (ஸ்கர்ரி) : இரண்டும் சிறிய எலிகள்.
ஹெம் மற்றும் ஹா: எலி அளவில் குட்டி மனிதர்களான இரண்டு பேர்.
அவர்கள் நான்கு பேரும் "சீஸ்" - அதாவது வெண்ணையை- தேடுகிறார்கள். இப்போது, இந்தக் கதையில், "சீஸ்" என்பது தினமும் சாப்பிடும் வெறும் உணவு என்று நினைக்காதீர்கள். அது வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எந்த இலட்சியம் அல்லது தேவையை குறிக்கிறது, அதாவது உதாரணமாக :
மகிழ்ச்சி அல்லது உணவு அல்லது ஒரு நல்ல வேலை அல்லது நல்ல நட்பு அல்லது நல்ல அறிவு / படிப்பு.. .. என எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதை தேடி இந்த நான்கு பெரும் போவதாக வைத்துக் கொள்ளலாம்.
என்ன நடக்கிறது கதையில் என்பது இங்கே:
அவர்கள் அனைவரும் சுரங்கத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெரிய சீஸ் குவியலைக் காண்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! தினமும் சாப்பிட அந்த குவியல் இருந்த இடத்திற்கு சாப்பிட வருவார்கள்.
ஆனால், ஹெம் மற்றும் ஹா, (சிறிய மனிதர்கள்), சீஸ் எப்போதும் அங்கு அதே குவியலாக பெரிய அளவில் இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு நாள், தினமும் குறைந்து குறைந்து , சீஸ் முழுவதும் போய்விட்டது! இப்போது எலிகள் என்ன செய்கின்றன, குட்டி மனிதர்கள் என்ன செய்கிறார்கள் ?
இந்த SNIFF மற்றும் SCURRY எலிகள் புதிய சீஸைக் கண்டுபிடிக்க விரைவாக வேறு திசைகளில் ஓடுகின்றன. அவை புதிய உணவை கண்டுபிடிக்க விரைவாக தங்களை தயார் படுத்திக் கொள்கின்றன. ஆனால் ஹெம் மற்றும் ஹா (இரண்டு குட்டி மனிதர்) வருத்தப்பட்டு கோபப்படுகிறார்கள். குவியல் எப்படி காணாமல் போயிற்று என ஆராய்ச்சி செய்கிறார்கள் !!! அவர்கள் தங்கள் பழைய இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு, "தான் மாற வேண்டும்" என்பதை ஹாவ் உணர்ந்து, புதிய சீஸைத் தேடுவதற்காகப் சுரங்கத்தில் மேலும் உள்ளே செல்கிறார். நல்ல விஷயத்திற்காக நம்மை மாற்றிக் கொள்வது நல்லது என்பதை ஹாவ் கற்றுக்கொள்கிறார், மேலும் அவர் புதிய சீஸை (உணவு) கண்டுபிடிக்கிறார்.
ஹெம், தான் இருக்கும் இடத்திலேயே இருக்கிறார், சீஸ் தானாகவே அதே இடத்தில் மீண்டும் வரும் என கற்பனை செய்து கண்டு அது ஏன் காணாமல் போய் விட்டது என வருந்தி எதுவும் செய்யாமல் இருக்கிறார். வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார்.
கதை இத்துடன் முடிந்து விட்டது.
முக்கிய பாடம்:
விஷயங்கள் மாறுகின்றன, மாற்றம் நல்லதே !!
மாற்றங்கள் வரும்போது புதிய வாய்ப்புகளை / நமக்கு தேவையானதை தேடிச் செல்லத் தயாராக இருப்பது முக்கியம். மாற்றத்தைக் கண்டு பயப்படுவதால் , நாம் புதிய மற்றும் சிறந்த விஷயங்களைக் கண்டுபிடிப்பதை அது தடுக்கிறது.
எனவே, கதையைப் போலவே, உங்கள் வாழ்க்கையில் விஷயங்கள் மாறும்போது, பயப்பட வேண்டாம்! ஸ்னிஃப், ஸ்கர்ரி மற்றும் ஹாவைப் போல இருங்கள், ஹெம் போல அல்ல !!உங்கள் புதிய "சீஸை"த் தேடிச் செல்லுங்கள்!
எவ்வளவு கவனித்தீர்கள், எவ்வளவு புரிந்தது, எவ்வளவு நினைவு இருக்கிறது ? பார்க்கலாமா ?
Now, see the video below and listen to the speech. Then answer the questions below in English. https://youtu.be/PDb1Wcb6idk : Speed 0.7
பின் வரும் கேள்விகளுக்கு பதில்களை முழு வாக்கியத்தில் ஆங்கிலத்தில் எழுது :
Write the topic of this Question Paper as : "Who moved my Cheese"
1. What are the names of the two mouse / mice ?
2. Complete the sentence: On the wall it was written... "Cheese makes you __________" ?
3. What was the name of place where Cheese was stored ?
4. What did Hem say when he could not find cheese the next day ?
5. What all four do in the morning ?
5. What all four do in the morning ?
6. For Ha, what did cheese mean for him ?
7. For Hem, what did cheese mean for him ?
8. What does the board mean "Dead End" on the wall ?
9. Did they say " the cheese will last for ever" ?
10. Who were brilliant ? The two mouse or the two men ?
11. Who said " Who moved my cheese" ? Hem or Haw ?