How to read English lessons ?
- Get link
- X
- Other Apps
By
gSeva.org (volunteer for eVidyaloka / Team Everest )

This page was printed out and issued to 7th class students in GHS, Kolappakkam and GHS, Pulavaikkarai.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது, உங்களுடய பாட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு ஸ்கிரீன்-திரையையும் புத்தகத்தையும் பார்க்க வேண்டும். ஆங்கில சொல்லின் ஒலியையும் அதன் தமிழ் அர்த்தத்தையும் (மீனிங் meaning ), புத்தகத்தில் அந்த ஆங்கில வார்த்தை அருகில் எழுதிக் கொண்டால், வீட்டில் அந்த பாடம் அன்றே படிக்கும் போது, நீங்கள் சுலபமாக அந்த கேள்வி பதிலை சரியாகப் படித்து, மனப்பாடம் செய்ய முடியும்.
மேலே சொன்னவற்றை நினைவில் கொண்டு , பாடம் நடக்கும் போது பாடத்தை கவனித்து (ஒலி + அர்த்தம் + ஸ்பெல்லிங் ) எழுதி கொள்ளுங்கள். பிறகு ஸ்பெல்லிங் உடன் வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டும். இங்கு உள்ள தமிழ் ஒலியை வைத்து வீட்டில் படிக்க கூடாது. ஆசிரியர் சொல்ல (நான் அல்லது வேறு யாரேனும் சொல்ல ) நீங்கள் கேட்ட ஒலிதான் உங்கள் நினைவில் இருக்க வேண்டும்.
சரியாக (சரியான உச்சரிப்பு ஒலியுடன், அர்த்தத்துடன் ) படிக்க முடியாததை உங்களால் மனப்பாடம் செய்ய முடியாது. நீங்கள் சொந்தமாக (புத்தகத்தில் உள்ள வார்த்தைகள் இல்லாமல்) ஆங்கிலம் எழுத கற்றுக் கொள்ளும் வரை, மனப்பாடம் செய்துதான் ஆக வேண்டும்.
படிக்காத கேள்வி-பதில்கள் தேர்வில் வந்தால் என்ன செய்வது ? அல்லது பாடத்தில் உள்ள கேள்விக்கு ஆசிரியர் பதில் சொல்லாமல் விட்டிருந்தால் என்ன செய்வது ?
எப்போதும் பாடத்தை முழுவதும் படித்து புரிந்து கொள்ள வேண்டும் , வெறும் கேள்வி-பதில் பகுதி மட்டும் படிப்பதால் பயன் (மார்க் மற்றும் திறமை) குறையும் . பாடம் நடத்தி முடிந்த பிறகு, குறிப்பிட்ட கேள்வி- பதில் ஆசிரியர் தரவில்லை என்றால் கூட, புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட வரிகளை அப்படியே எழுதினால் கூட தேர்வில் மார்க் வரும். எந்த சப்ஜெக்ட் ஆக இருந்தாலும், முழு பாடமும் (பாடத்தின் பின்னே உள்ள பயிற்சி பகுதிக்கு முன்பு உள்ளது) படிக்க வேண்டும். அதில் தெரியாத சொற்களுக்கு பொருள், அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். அர்த்தம் புரியாமல், சரியான உச்சரிப்பு இல்லாமல், ஸ்பெல்லிங் கூட்டாமல், படித்தால் மனப்பாடம் செய்ய முடியாது, அல்லது தேர்வில் நினைவுக்கு வராது.
- சரவணன் , ஜி-சேவா , இ-வித்யாலோகா
- Get link
- X
- Other Apps